மீண்டும் டுவிட்டரில் டிரெண்டாகும் விஜய்யின் செல்பி: காரணம் என்ன தெரியுமா?

by Lifestyle Editor
0 comment

‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் ஒரு வருடம் கழித்து மீண்டும் டிரெண்டாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மாஸ்டர்.

இப்படத்தில் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து கொண்டிருந்த போது, விஜய்யின் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது.

அப்போது விசாரணைக்காக விஜய் சென்று வந்த பின்னர், மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இதன்போது ஏராளமான ரசிகர்கள் கூட, படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது ஏறிய விஜய் கூட்டமாக நின்ற ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் இந்த புகைப்படம் டுவிட்டரில் வெளியிடப்பட்டது.

அப்போது இந்த படம் டுவிட்டரில் டிரெண்டாகி சாதனைகளை படைத்தது, தற்போது இந்த செல்பி எடுக்கப்பட்டு ஒரு வருடம் கடந்ததை ரசிகர்கள் #1YearOfMasterSelfie என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment