கோவிட்-19ன் தோற்றம் குறித்து தடயங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர்கள், இதுவரை அவர்கள் கண்டுபிடித்ததை இன்று வெளியிடஉள்ளனர்.
சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு தொடங்கியது என்பது குறித்த விசாரணை மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பின் சிறப்பு ஆராய்ச்சி குழு, கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் கண்டுபிடித்ததை இன்று வெளியிடவுள்ளதாக்க அறிவித்துள்ளனர்.
விசாரணையில் ஈடுபட்டுள்ள சீனத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் WHO நிபுணர்களுடன் இணைந்து இன்று தங்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குழு ஜனவரி 14-ஆம் தேதி வுஹான் நகரத்தை சென்றடைந்தது. இரண்டு வார தனிமைப்படுத்தளுக்குப் பிறகு, கொரோனா வைரஸுடன் தொடர்புடையதாக அறியப்பட்ட முக்கிய தளங்களை பார்வையிட்டது.
அவர்கள் முதலில் தொற்றுநோயின் தொடக்க இடமான ஹுவானன் கடல் உணவு சந்தையையும், கோவிட் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தையும் பார்வையிட்டனர்.
கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக பல இடங்களில் விசாரணைகள் மேற்கொண்ட நிலையில், பல முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்கிழமை) மாலை 3.30 மணியளவில் WHO குழு தங்கள் பயணத்தின் கண்டுபிடிப்புகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.