பிரித்தானியாவில் இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ள புதிய விதிகளின் கீழ் நாட்டிற்குள் உருமாறிய கொரோனா பரவுவதை தடுக்கும் புதிய முயற்சியில் நாட்டிற்கு வருகை தரும் அனைத்து பயணிகளும் இரண்டு கொரோனா வைரஸ் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த நடவடிக்கை மேலும் கூடுதலான பாதுகாப்பை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும், இது புதிய தொற்றுகளை மிகவும் திறம்பட கண்காணிக்க அதிகாரிகளுக்கு உதவுகிறது என சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் 10 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குள் இரண்டு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
33 ‘சிவப்பு பட்டியல்’ நாடுகளில் இருந்து திரும்பும் பிரித்தானியர்களை நெருக்கமாக கண்காணிக்க அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது.
தற்போது ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களும் இரண்டு சோதனைகளை எடுக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.