நாகதோஷ பாதிப்பைக் குறைக்கும் காயத்ரி மந்திரம்!

by Lifestyle Editor
0 comment

வேத காலத்தில் இருந்து நாக வழிபாடு நம் பாரம்பரியத்தில் உள்ளது. நாகத்தை வழிபட்டு வருவதன் மூலம் நாக தோஷம் நம்மைவிட்டு நீங்கும். நாக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரம் இல்லை என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அதிலும் குறிப்பாக நாகத்தைத் தாக்கியதால் ஏற்பட்ட தோஷம் மிகவும் அபாயகரமானது. ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் அது நீங்காது என்று கூறுவார்கள்.

நாக தோஷம் இருப்பவர்களுக்குத் திருமணத்தில் தடை ஏற்படும், கணவன் – மனைவி இடையே பிரிவு இருக்கும், குழந்தை பாக்கியம் இருக்காது. எனவே, தோஷம் உள்ளவர்கள் மட்டுமின்றி, திருமணம் தடைப்படுபவர்கள், திருமணத்துக்குக் காத்திருப்பவர்கள், குழந்தையின்மையால் அவதியுறுபவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள் தினமும் நாக ராஜனை நினைத்து நாக ராஜன் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வர வேண்டும். அப்படி ஜெபித்து வந்தால் திருமணம் விரைவில் நடக்கும், குழந்தை பிறக்கும், தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள்.

நாக ராஜன் காயத்ரி மந்திரம்:

ஓம் சர்பராஜாய வித்மஹே

நாகராஜாய தீமஹி

தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்

விளக்கம்:

நாகங்களுக்குத் தலைவனான நாக ராஜனே உம்மை வணங்குகிறேன். என்றென்றும் உங்களை நினைக்கும் இந்த அடியேனுக்கு ஆசி வழங்கி அருள்புரிய வேண்டுகிறேன்.

கருடாழ்வார் ஸ்லோகம்:

கருடாழ்வாரை வணங்கினால் நாகதோஷம் விலகும் என்று சொல்வார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

குங்கு மாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச

விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பக்ஷிராஜாய நேநம

Related Posts

Leave a Comment