‘குட்டி ஸ்டோரி’ என்ற அந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் நடித்து இயக்கியுள்ள ‘எதிர்பாரா முத்தம்’ என்ற பகுதியில் இடம் பெற்ற காட்சிகள் பார்த்தவர்களை முகம் சுளிக்க வைத்துவிட்டதாம்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர்கள் கவுதம் மேனன், ஏஎல் விஜய், நலன் குமாரசாமி மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் ‘குட்டி ஸ்டோரி‘ என்ற அந்தாலஜி படத்தின் நான்கு பாகங்களை இயக்கியுள்ளனர். இந்தப் படத்திற்கு கார்த்திக் என்பவர் இசையமைத்துள்ளார்.
தற்போது கவுதம் மேனன் நடித்து இயக்கியுள்ள பகுதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்தப் பகுதிக்கு ‘எதிர்பாரா முத்தம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ளார்.
குட்டி ஸ்டோரி அந்தாலஜி படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தியேட்டரில் வெளியாகும் முதல் அந்தாலஜி படமும் கூட.
இந்நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் குடும்பத்தினர் உட்பட சில முக்கிய நபர்கள் குட்டி ஸ்டோரி படத்தைப் பார்த்துள்ளனர். அதில் கவுதம் மேனன் இயக்கியுள்ள பகுதிகளில் முகம் சுளிக்கும் அளவிலான ஆபாசச் சொற்கள் இடம் பெற்றிருந்ததாம். குடும்பத்துடன் அமர்ந்து பார்த்தவர்களுக்கு இது முகச்சுளிப்பை ஏற்படுத்திவிட்டதாம். ஆனால் தணிக்கையில் அந்த மாதிரியான சொற்கள் இடம் பெறும் காட்சிகளில் அமைதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றும் கூறப்படுகிறது.
முதலில் படம் ஓடிடி-யில் வெளியிடும் திட்டத்தில் இருந்ததால் அந்த மாதிரியான சொற்கள் அதிகம் இடம் பெறும் படியாக காட்சிகள் வைத்துள்ளார். அதன் பிறகு திடீரென படம் தியேட்டரில் வெளியாகும் என்றதும் படத்தின் அந்த மாதிரியான காட்சிகளில் ஒலி அமைதிப்படுத்தப்பட்டுள்ளதாம்
எதிர்பாரா முத்தத்தில் எதிர்பாராதது அதிகம் இடம் பெறும் போல!