“ஹலோ உங்களுக்கு டீசன்ஸி பத்தல” – ஸ்டாலினை சீண்டிய எடப்பாடி பழனிசாமி!

by Lifestyle Editor
0 comment

சசிகலா வருகை ஒருபுறம் இருந்தாலும் தேர்தல் பிரச்சாரத்தில் சூறாவளியாக மேற்கொண்டிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் மின்னல் வேகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இந்த இருவருக்கும் அடிக்கடி பிரச்சாரத்தில் காரசார விவாதம் நிகழும். அந்த வகையில் இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கையனூரில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “அதிமுக அரசு மக்களுக்கு கொடுத்து தான் பழக்கம். ஆனால் திமுகவுக்கு எப்போதும் மக்களிடம் எடுத்துதான் பழக்கம். அதிமுக ஆட்சியில் ஏழைக் குடும்பங்கள் கல்வி பெற ஏற்பாடு செய்தோம். திமுக ஆட்சியில் ஏழைகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. நாங்கள் பல பள்ளிகளை தரம் உயர்த்தினோம். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். ஆனால் இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என ஸ்டாலின் பொய் பரப்புரை செய்கிறார். சம்பந்தமில்லாமல் பேசுகிறார். அவர் சட்டமன்றத்திற்கும் வருவது கிடையாது நாட்டில் என்ன நடக்கிறது என்றும் தெரியாது. இந்த நிலையில் செய்தித்தாள்களில் எதற்குப் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார்கள் என்று அவர் கேட்கிறார்.

எடப்பாடி பழனிசாமி என்ன கிழித்தார் என்று நாகரிகமில்லாமல் பேசுகிறார் ஸ்டாலின். ஆனால் அவர் தெரிந்து கொள்வதற்காகவும் மக்களும் எதிர்க்கட்சிகளும் தெரிந்து கொள்வதற்காகத் தான் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கிறோம். என்ன கிழித்தாய் என்கிறீர்கள்; என்ன கிழித்தோம் என்பதை நாங்கள் சொல்கிறோம். மக்களுக்கு நாங்கள் என்ன செய்தோம் என்பதைக் கூற நேரடி விவாதத்திற்கு அழைத்தால் ஸ்டாலின் வருவதில்லை. நகர்ப்புற மக்கள், கிராமப்புற மக்கள் என அனைவருக்கும் புதிதாக 2 லட்சம் வீடுகளைக் கட்டி கொடுத்துள்ளோம்.

ஸ்டாலின் பெட்டி வைத்து மனுக்களைப் பெறுகிறார். ஆட்சிக்கு வந்தவுடன் தீர்ப்போம் என்கிறார். அவர் ஆட்சிக்கு வரப்போவதுமில்லை மக்களின் குறைகளைத் தீர்க்க போவதுமில்லை. விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்தோம். ஒருவார காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் கடனைத் தள்ளுபடி செய்யவுள்ளோம். எனவே அதிமுகவுக்கு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

Related Posts

Leave a Comment