சசிகலாவுடன் 22 மணிநேரம் காரில் பயணித்தவர்! அவர் யாருன்னு தெரியுமா?

by News Editor
0 comment

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்ததால் சசிகலா கடந்த மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்த சசிகலா கடந்த வாரம் பெங்களூரு மருத்துவமனையில் இருந்து பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்தார்.

ஒரு வாரம் ஓய்வுக்கு பின்னர் நேற்று பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சசிகலா காரில் புறப்பட்டு வந்தார். அவருக்கு அமமுகவினர் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

சசிகலா 4 வருட சிறை தண்டனை முடிந்து தமிழகம் திரும்பியதால், அவரை பார்க்க அமமுகவினர் பலர் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். இதனால பெங்களூரு தொடங்கி சென்னை வரை அமமுகவினர் திரண்டு வந்து சசிகலாவை வரவேற்றனர். ஊடகங்களும் சசிகலா வீட்டை விட்டு புறப்பட்டது முதல் சென்னை வரும் வரை நேரலை செய்யப்பட்டது.

இதனையடுத்து, சென்னையில் பல்வேறு இடங்களில் ஆதரவாளர்களை சந்தித்தார் சசிகலா. இறுதியாக சசிகலா சென்னை வந்து ராமாவரம் எம்ஜிஆர் இல்லத்திற்கு அதிகாலையில் சென்றார். அதன்பிறகு இன்று அதிகாலை சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டிற்கு சென்றார்.

சசிகலா உடன் 22 மணி நேரம் வாகனத்தை ஓட்டியபடி ஒருவர் அவருடனே பயணம் செய்தார். அவர் பெயர் பிரபு. இவர் ஜெயலலிதாவிடம் 25 வருடம் டிரைவராக இருந்தவர். ஜெயலலிதாவிற்கு கார் ஓட்டிய பிரபு, சசிகலாவிற்கு நேற்று கார் ஓட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment