பிக்பாஸைத் தொடர்ந்து அனிதாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்

by News Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அனிதா சம்பத் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரபல ரிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பது மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ள அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வந்தார்.

இதில் தனித்துவமாக விளையாடிய போட்டியாளர்களில் அவரும் ஒருவர். டாஸ்க்குகள் என்று வந்தால் பட்டையை கிளப்பினார். இதனால் ஃபைனல்ஸ் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரியுடன் தேவையில்லாமல் சண்டை போட்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

இதன் எதிரொலியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓரிரு நாட்களில் அவரது தந்தை மரணமடைந்தார்.

இதனால் அதுவரை அனிதாவை திட்டிவந்த நெட்டிசன்கள், அதன்பிறகு அவர் மீது அனுதாபத்தையும் இரக்கத்தை காட்டினர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல டிவியில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் அவரது கணவரும் கலந்து கெண்டார்.

இந்நிலையில் அந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள அனிதா சம்பத், அனைவரின் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய பாத்ரூம் பாடல்களை தாங்கி கொண்டதற்கும் நன்றி கூறியுள்ளார் அனிதா.

அதோடு இந்த லட்சணத்தில் அடுத்து ஸ்டார்ட் மியூஸ்க்கில் வேற பாடியிருக்கேன் என்றும் கூறியுள்ளார் அனிதா சம்பத்.

இதன் மூலம் அனிதா சம்பத், விஜய் டிவியில் பிரியங்கா தொகுத்து வழங்கும் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என தெரிய வந்துள்ளது. அவர் பங்கேற்ற ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Posts

Leave a Comment