பாரிஸ் நகரில் வசித்து வரும் கோலட் பிரமை என்ற மூதாட்டி தனது 106 வயதிலும் தளராது பியானோ வாசித்து வருகின்றார். இவர் பியானோ வாசிக்கும் காட்சி காண்போரை ஆச்சரியப்பட வைக்கிறது.
இந்த மூதாட்டி இசைமீது அலாதிப் பிரியம் உடையவரக விளங்குகிறார். இவர் தன்னுடைய 4வது வயதில் இருந்து பியானோ வாசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மூதாடட்டி தனது 6வது இசைத் தொகுப்பை வெளியிட உள்ளார். தன்னுடைய சோகம், சந்தோஷம் என அனைத்து நேரங்களிலும் பியானோ வாசித்து தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இவரின் முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.