ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீடிப்பு – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

by Lankan Editor
0 comment

2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கும் வரை, ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்கா அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்கினால் மாத்திரமே தெஹ்ரான் இணக்கம் தெரிவிக்கும் என ஈரானிய தலைவர் அயோதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக 2018 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.

மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமுல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே, அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஈரான் மீண்டும் இணங்கும் பட்சத்தில், நீண்ட மற்றும் வலுவான ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment