இலங்கையில் 70 ஆயிரத்தைக் கடந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்

by Lankan Editor
0 comment

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று மாத்திரம் 868 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 70,216 ஆக அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment