பாண்டியன் ஸ்டோர் கதிருக்கு என்னாச்சு? சீரியலில் வராமல் இருப்பதற்கு வெளியான காரணம்

by Lifestyle Editor
0 comment

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர்.

அண்ணன், தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் குடும்ப தொடரான இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், ஹேமா பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடரில் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்ட ஜோடி கதிர்- முல்லை ஜோடி தான். இதில் கதிராக குமரன் நடித்துள்ளார். மேலும் முல்லையாக விஜே சித்ரா நடித்து வந்த நிலையில் கடந்த சில காலங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில் பாரதிகண்ணம்மா தொடரில் அறிவுமணியாக நடித்து வந்த காவியா நடிக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடரில் கதிராக நடித்துவந்த குமரன் கதாபாத்திரத்தை காட்டவில்லை. மேலும் அவர் வெளியூர் சென்று விட்டதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்கள் கதிருக்கு என்னாச்சு? ஏன் அவரை காட்டவில்லை என குழம்பிப் போயிருந்த நிலையில், கதிராக நடித்துவரும் குமரனுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், பட வாய்ப்புக்காக அவர் பெங்களூர் சென்றுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து குமரன் தரப்பிலிருந்து எதுவும் கூறப்படவில்லை.

Related Posts

Leave a Comment