பிரித்தானியாவில் வாழும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அனைவருக்கும் தடுப்பூசி போடுவதன் மூலம் Herd Immunity உருவாக்க முடியும் என அரசு நம்புகிறது.
ஆகவே, சட்ட விரோத புலம்பெயர்ந்தோராக இருந்தாலும், அவர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருமாறு அரசு அழைத்துள்ளது.
அத்துடன், அப்படி வரும் சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அரசு அறிவித்துள்ளது.
என்றாலும், சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்ய தயக்கம் காட்டி வருகிறார்கள்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துகொண்டால், புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு தங்களைக் குறித்து தகவல் அளிக்கப்படும் என அவர்கள் பயப்படுவதாக தெரிகிறது.
பிரித்தானியாவில் 1.3 பில்லியன் சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் வசித்துவருவதாக கருதப்படுகிறது.