காமாட்சி விளைக்கை தினம் ஏற்றுவதால் வீட்டில் நடக்கும் அற்புத பலன்கள்

by Lifestyle Editor
0 comment

காமாட்சி அம்மனுக்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம்.

ஏன் ஏற்றுகிறோம்

உலக மக்களின் தவமிருந்த கடவுள் காமாட்சி அம்மன். அவர் தவமிருந்த போது அனைத்து கடவுளும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியதாக கூறப்படுகிறது.

அதனால் காமாட்சி அம்மனை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

ஒவ்வொருவரும் தங்களுடைய குல தெய்வத்தை எண்ணி காமாட்சி விளக்கை ஏற்றும் போது பல நன்மைகள் நமக்கு வந்து சேரும். குலதெய்வத்தின் ஆசியும் நமக்கு கிடைக்கும்.

சிலருக்கு குலதெய்வம் எது என்பதே தெரியாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் காமாட்சி அம்மனை குலதெய்வமாக நினைத்து வழிபட்டால் நல்லது நடக்கும்.

மேலும், காமாட்சி விளக்கை ஏற்றுவதால் கிடைக்கும் பலன்களை பற்றி தெரிந்துகொள்வோம்…

1. வீட்டில் அனைத்து விதத்திலும் மங்களம் உண்டாகும்.

2. குலம் தழைக்கும்.

3. கிரக தோஷங்கள் தீரும்.

4. செல்வம் செழிக்கும், வறுமை நீங்கும்.

5. வழக்குகள் வெற்றி அடையும்.

6. நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

Related Posts

Leave a Comment