எனக்கும் பாலியல் தொல்லைகள் இருந்தது: பகீர் கிளப்பிய நடிகை அனுஷ்கா

by Lifestyle Editor
0 comment

தான் சினிமாவுக்கு வந்த புதிதில் பாலியல் தொல்லைகள் இருந்ததாக கூறி அதிரவைத்துள்ளார் நடிகை அனுஷ்கா.

கடந்த சில ஆண்டுகளாகவே Me Too விவகாரம் சர்ச்சையை கிளப்பி வருகிறது, நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலரும் தாங்கள் அனுபவித்த வேதனைகளை Me Tooல் பேசி வருகிறார்கள்.

அந்த வகையில், தனக்கும் அந்த தொல்லை இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் நடிகை அனுஷ்கா.

அவர் கூறுகையில், சினிமா துறை கவர்ச்சி மிகுந்தது, அதனால் தான் இங்கு நடப்பது பெரிய விஷயமாக பேசப்படுகிறது.

சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக பலரும் சொல்கிறார்கள், அப்படி இல்லை என்று நான் சொல்ல மாட்டேன்.

இது சினிமா மட்டுமின்றி மற்ற துறைகளிலும் இருக்கிறது, நானும் சினிமாவுக்கு வந்த புதிதில் இந்த தொல்லையை சந்தித்தேன்.

ஆனாலும் பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. நான் நேர்மையாக இருக்க கூடியவள் என்பது மற்றவர்களுக்கு புரிய ஆரம்பித்ததும் தொந்தரவுகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சில கஷ்டங்கள் இருந்ததாகவும், ஒரு பெண் மறுத்துவிட்டாள் ஆண்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டு மரியாதை தர தொடங்கிவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment