அட.. அரை டவுசருடன் இருக்கும் தெய்வமகள் அண்ணியார்! அவருக்கு இவ்வளவு பெரிய மகளா! தீயாய் பரவும் புகைப்படம்!

by News Editor
0 comment

தெய்வமகள் தொடரில் வில்லியாக நடித்த நடிகை ரேகா கிருஷ்ணப்பா அவரது மகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவ்வாறு சன் தொலைக்காட்சியில் மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் தெய்வமகள். இந்த தொடரில் கதாநாயகியாக நடித்த வாணி போஜனுக்கு தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்த தொடரில் காயத்ரி கதாபாத்திரத்தில் கொடூர வில்லியாக, ஹீரோவின் அண்ணியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ரேகா கிருஷ்ணப்பா. அதனைத் தொடர்ந்து அவர் லட்சுமி தொடரில் மீண்டும் வில்லியாக நடித்திருந்தார்.இவர் தனது வில்லத்தனமான நடிப்பால் பலரையும் மிரளவைத்துள்ளார். மேலும் வில்லி என்றாலே தற்போதும் இவரது முகம்தான் பலருக்கும் நினைவில் வரும். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம் தொடர்களிலும் நடித்துள்ளார்.

ரேகா கிருஷ்ணப்பா கணவர் வசந்த் குமார். இந்த நிலையில் தற்போது எந்த தொடரிலும் நடிக்காத ரேகா தனது மகள் பூஜாவுடன் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் தெய்வமகள் அண்ணியாரா இது? அவருக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment