ஆபாச படம் எடுத்த பிரபல பிக்பாஸ் நடிகை கைது!

by News Editor
0 comment

பிரபல பாலிவுட் நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச படப்பிடிப்பு நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கெஹானா வசிஸ்த், தமிழில் ‘பேய்கள் ஜாக்கிரதை’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருப்பார். பல பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டில் ‘மிஸ் ஆசியா பிகினி’ போட்டியில் வென்ற பிறகு அவர் பிரபலமானார். ஹிந்தியில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது கெஹானாவை பிரபலமடையச் செய்தது.

இந்நிலையில், கெஹானா ஆபாச வீடியோக்களை படப்பிடிப்பு மற்றும் பதிவேற்றம் செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ள கெஹானா இன்று நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment