பங்களாதேசில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்

by Lankan Editor
0 comment

பங்களாதேசில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் மாதத்தில் சுமார் 35 இலட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இதுவரை 3,28,000 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் 3 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற பங்களாதேஷ் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதில் முதற்கட்டமாக தற்போது 50 லட்சம் தடுப்பூசிகள் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் இந்திய அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

Related Posts

Leave a Comment