இன்று முதல் 27 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

by Lankan Editor
0 comment

நாட்டில் இன்று (08) முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன என வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய விலையின் நிர்ணய தன்மை எதிர்வரும் மூன்று மாத காலத்துக்கு நிலையாக பேணப்படுவதுடன்இ இடைப்பட்ட காலத்தில் தெரிவு செய்யப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்று வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நுகர்வோர் லங்கா சதொசஇ கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள்இ கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

தேசிய உற்பத்திகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளமை தற்போதைய விலை குறைப்புக்கான பிரதான காரணியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசேட கண்காணிப்பு நடவடிக்கை நாடு தழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அதன்படி விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விபரம்..

வெள்ளை அரிசி ஒரு கிலோ – 93 ரூபாய்
வெள்ளை நாடு அரிசி ஒரு கிலோ – 96 ரூபாய்
சம்பா ஒரு கிலோ – 99 ரூபாய்
கீரி சம்பா ஒரு கிலோகிராம் – 125 ரூபாய்
கோதுமை மா ஒரு கிலோகிராம் -84 ரூபாய்
வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் -99 ரூபாய்
சிவப்பு சீனி ஒரு கிலோகிராம் -125 ரூபாய்
தேயிலை தூள் 100கிராம் பெக்கட்- 95 ரூபாய்
சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் -165 ரூபாய்
பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் -120 ரூபாய்
உருளைக்கிழங்கு (தேசிய உற்பத்தி) ஒரு கிலோகிராம்- 180 ரூபாய்
உருளைக்கிழங்கு (பாக்கிஸ்தான்) ஒரு கிலோகிராம் -140 ரூபாய்
கடலை ஒரு கிலோகிராம் -175 ரூபாய்
உலர் மிளகாய் ஒரு கிலோகிராம் -495 ரூபாய்
டின் மீன் 425 கிராம் -220 ரூபாய்
டின்மீன்(இறக்குமதி)-265 ரூபாய்
நெத்திலி 1கிலோகிராம் -575 ரூபாய்
கோழியிறைச்சி ஒரு கிலோகிராம் -400 ரூபாய்
உப்பு ஒரு கிலோகிராம் -43 ரூபாய்
பால்மா 400 கிராம் -355 ரூபாய்
சோயா எண்ணெய் 500 மி.லீ. – 310 ரூபாய்
ஆடை கழுவும் சவர்காரம் 115 கிராம் – 43 ரூபாய்
பார் சவர்காரம் 650 கிராம் – 260 ரூபாய்
வாசனை சவர்காரம் 100 கிராம் – 56 ரூபாய்
பற்பசை – 250 ரூபாய்
முகக்கவசம் – 14 ரூபாய்

Related Posts

Leave a Comment