தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாட்டம்

by Lifestyle Editor
0 comment

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 10 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து பணம் மற்றும் மடிக் கணினியை பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் பஜார் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையில் போலீசார் அங்குள்ள தனியார் விடுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விடுதி அறையில் பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த இளையராஜா, முத்து முருகேசன் உள்ளிட்ட 10 பேரை அதிரடியாக மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 31 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய மடிக் கணிணியை பறிமுதல் செய்தனர். மேலும், 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைதுசெய்தனர்.

Related Posts

Leave a Comment