பிரபாஸ் படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா!?

by Lifestyle Editor
0 comment

கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் ‘சலார்’ படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘கேஜிஎஃப்’ என்ற ஒரு படத்தின் மூலமே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த பிரஷாந்த் நீல் அடுத்து பிரபாஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளார். சலார் திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது.

தற்போது அந்த பிரமாண்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக சலார் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடமானட பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை பிரஷாந்த் நீல் அணுகியிருப்பதாகக் கூறப்படுகிறது. பிரியங்கா சம்மதித்துவிட்டால் படத்திற்கு உலகளவில் மார்க்கெட் அதிகமாகும் என்பது படக்குழுவின் திட்டம்.

சலார் படத்தில் பிரபாஸ் மெக்கானிக் ஆக நடிக்கிறாராம். மேலும் ஸ்ருதி ஹாசன் முதன்முறையாக பிரபாஸ் உடன் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ் தற்போது ராதே கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார்

Related Posts

Leave a Comment