பிரித்தானியாவில் இறுகும் கட்டுப்பாடுகள்… 4 முறை கொரோனா சோதனை: மொத்த கட்டணமும் அவரவர் பொறுப்பு

by Lifestyle Editor
0 comment

கொரோனா அச்சுறுத்தல் பட்டியலில் இடம்பெறாத பகுதியில் இருந்து பிரித்தானியா திரும்பும் பயணிகள் கண்டிப்பாக 4 முறை கொரோனா சோதனைக்கு உட்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த 33 நாடுகளில் இருந்து பிரித்தானியா திரும்பும் பயணிகள் கண்டிப்பாக 10 நாட்கள் ஹொட்டல்களில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்த விதிமுறை பிப்ரவரி 15 முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது, அந்த 33 நாடுகள் பட்டியலில் இடம்பெறாத நாடுகளில் இருந்தும் பிரித்தானியா திரும்பும் பயணிகள் கண்டிப்பாக 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதுடன், இந்த நாட்களில் கட்டாயமாக மூன்று முறை கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4-வது சோதனையானது தனிமைப்படுத்துதல் காலத்தின் நடுவில் மேற்கொள்ளவும் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மட்டுமின்றி, இந்த நான்கு கொரோனா சோதனைகளுக்குமான மொத்த கட்டணமும் அவரவர் பொறுப்பு எனவும்,

இந்த நான்கு சோதனைகளும் மேற்கொள்ளாத பயணிகள் அபராதம் செலுத்த நேரிடும் எனவும் கூறப்படுகிறது.

கொரோனா சோதனைகளுக்கு எவ்வளவு தொகை கட்டணமாக அளிக்க நேரிடும் என தெளிவான தகவல் இல்லை.

இருப்பினும், ஒரு சோதனைக்கு 150 பவுண்டுகள் வரை கட்டணமாக வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிரித்தானியா திரும்பும் பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன்னர் ஒருமுறை கொரோனா சோதனை முன்னெடுத்து, பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பிரித்தானியா திரும்பிய பின்னர் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தனிமைப்படுத்துதல் தொடங்கிய 2-வது நாள் முதல் கொரோனா சோதனை முன்னெடுக்கப்பட வேண்டும்.

8-வது நாள் 4-வது கட்டாய கொரோனா சோதனைக்கு பயணிகள் உட்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment