ஊர் முழுவதும் இரத்த சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடும் நீர்! கடும் அச்சத்தில் மக்கள்

by Lifestyle Editor
0 comment

இந்தோனேஷியாவில் ரத்த சிவப்பு நிறத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தோனேசியாவில் மத்திய ஜாவா தீவில் ஜெங்கோட் என்கிற இடத்தில் பிப்ரவரி 6ஆம் திகதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த தீவின், பெகலோங்கன் நகரத்தின் தெற்குப் பகுதி, இந்தோனேசியாவின் பாரம்பரியமிக்க முறையில், ஆடைகளில் மெழுகிட்டுச் சாயமிடும் தொழிற்சாலைகள் உள்ளன.

தொடர் மழையினால் சாயத் பட்டறைக்குள் புகுந்த நீரில், சிவப்பு சாயம் கலந்ததால் செந்நிறத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், இதில் நடப்பதால் கால்களில் அரிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

பெகலோங்கனில் இருக்கும் நதிகள், இதற்கு முன்பும் மழை வெள்ளி நீர் தொழிற்சாலை சாயங்களால் நிறம் மாறியிருக்கின்றன. கடந்த மாதம் கூட மற்றொரு கிராமத்திலிருந்து வெள்ள நீர் புகுந்ததால், கிராமம் முழுவதும் பச்சை நிறத்தில் மாறியது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment