5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அரசு! முதல்வர் பெருமிதம்!

by Lifestyle Editor
0 comment

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 16.2.2017ல் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த ஆட்சி 3 மாதம் அல்லது 6 மாதம் நிலைக்குமா? என்று எதிர்க்கட்சித்தலைவர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால், மக்கள் பணியை சிறப்பாக செய்த காரணத்தினால் வரும் 15.2.2021 அன்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது எடப்பாடியாரின் ஆட்சி.

ஐந்தாம் ஆண்டில் அரசு அடியெடுத்து வைப்பதை எடப்பாடி பழனிச்சாமியும் தமிழக சட்டப்பேரவையில் நேற்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

‘’புரட்சித்தலைவி அம்மா எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்று சூளூரைத்ததை நிறைவேற்றும் வண்ணம், மக்கள் பணியை சிறப்பாக செய்த காரணத்தினால், ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் கூற விரும்புகிறேன்’’ என்று பெருமிதத்துடன் சொன்னார்.

Related Posts

Leave a Comment