‘ஆழமான வெட்டு காயங்களை உடனடியாக குணப்படுத்தும் பசை’

by Lifestyle Editor
0 comment

அமெரிக்காவின் பயோமெடிக்கல் பொறியாளர்கள் மற்றும் சிட்னி பல்கலைக்கழகம் இரண்டும் இணைந்து அறுவை சிகிச்சை பசை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்தப் பசையை காயம் ஏற்பட்டுள்ள இடங்களில் செலுத்தும்போது 60 வினாடிகளில் காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள வெட்டு மறைந்து மூடிக்கொள்ளும்.

ஆசியாவின் முன்னணி பயோஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் கிரண் மஜும்தார் ஷா, இதற்கான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மெட்ரோ என்று அழைக்கப்படும் இந்த பசை காயங்களை வெறும் 60 வினாடிகளில் மூடும் படியாக செய்கிறது. ஜெல் போன்ற இந்த பசையை புற ஊதா ஒளியால் செலுத்தும்போது அது உடனடியாக கரைந்து விடுகிறது.மெட்ரோ பசைகள் செயல்பாடு உடலில் உள்ள திசுக்களில் காயங்களை மூடுவதற்கு ஏற்றதாக இருக்கிறது. இது இதயம் அல்லது நுரையீரல் போல விரிந்து உடனடியாக தனது வேலையை செய்ய ஆரம்பிக்கிறது.

இந்தப் பசை எதிர்காலத்தில் மருத்துவ அறிவியலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அத்துடன் ஆழமான வெட்டுக் காயங்களுக்கு உடனடி தீர்வாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக இந்த பசை, பன்றிகள் மீது செலுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. விரைவில் இது மனித சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு , பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment