பிரபல தமிழ் திரைப்பட நடிகர் தூக்கு போட்டு தற்கொலை! அதிர்ச்சியில் திரையுலகினர் மற்றும் நண்பர்கள்

by Lifestyle Editor
0 comment

பிரபல நடிகர் ஸ்ரீவஸ்தவ் சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீவஸ்தவ் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து யூ-டியூப்பில் ஒளிப்பரப்பாகி வரும் ‘வல்லமை தாரோயா’ என்கிற வலை தொடரிலும் நடித்து வந்தார்.

கடந்த புதன்கிழமை படப்பிடிப்புக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட அவர், அன்றைய நாள் முழுவதும் வீடு திரும்பவில்லை. ஷூட்டிங்கில் இருந்தால் ஸ்ரீவஸ்தவ் தனது போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிடுவது வழக்கம். இதனால் அவருடைய குடும்பத்தார் மகன் படப்பிடிப்பில் இருப்பதாக நினைத்துக்கொண்டனர்.

இந்நிலையில் ஸ்ரீவஸ்தவ் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் மற்றொரு வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீவஸ்தவ் சில காலமாகவே மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்ததும் அதற்கான சிகிச்சையை பெற்று வந்ததும் தெரியவந்தது.

ஸ்ரீவத்ஸ்தவின் மரணம் திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர்களை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அவர் தற்கொலை குறித்து தொடர்ந்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment