மும்மூர்த்திகளின் உறைவிடமான வில்வ மரம்!

by Lifestyle Editor
0 comment

சிவனை வழிபட வில்வ இலை முக்கிய அர்ச்சனைப் பொருளாக இந்துக்கள் பயன்படுத்துகின்றனர். சிவனுக்கு மட்டுமல்ல மும்மூர்த்திகளுக்கும் உரிய, மும்மூர்த்திகளும் உறையும் இடமாக வில்வமரம் உள்ளது.

திருப்பாற்கலை கடைந்தபோது லட்சுமி தோன்றியபோது அவருடைய கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே, வில்வ மரம் மகாலட்சுமி தங்கும் இடமாகவும் இருக்கிறது.

வில்வத்தில் மூன்று, ஐந்து, ஏழு இதழ்கள் வரை இருக்கின்றன. இதில் மூன்று இதழ் வில்வத்தையே பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். வில்வத்தில் 21 வகை உள்ளதாகவும் அதில் மகா வில்வமும், அகண்ட வில்வம் உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.

வில்வ இலைகளை காலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே பறித்துவிட வேண்டும்.சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களிள் பறிக்கக் கூடாது. அதே போல், பிறப்பு, இறப்பு தீட்டு நாட்கள் மற்றும் பெண்கள் மாதவிலக்கு காலங்களில் வில்வ மரத்தின் அருகில் கூட செல்லக் கூடாது.

வில்வ இலைக்கு தோஷங்கள் இல்லை. எனவே, வில்வ இலையைப் பறித்து சிறிது தண்ணீர் தெளித்து பிறகு அதை அப்படியே பூஜைக்கு பயன்படுத்தலாம்.

வில்வ இலை, வேர் என அனைத்தும் குளிர்ச்சியானது என்பதால் பாம்பு வரும் என்று பலரும் இதை வீட்டில் வளர்க்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால், வில்வத்தை வீட்டில் வளர்த்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும். வில்வத்தை வீட்டில் வளர்ப்பவர்களுக்கு நரகம் இல்லை.

ஒரு வில்வ இலையைக் கொண்டு சிவனை அர்ச்சனை செய்வது லட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்ததற்குச் சமம். மேலும் கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய, 108 சிவ தலங்களுக்குச் சென்று தரிசித்த பலன் கிடைக்கும். ஒரே ஒரு வில்வத்தைச் சிவனுக்கு அர்ப்பணித்தாலே மூன்று ஜென்ம பாவங்கள் நம்மை விட்டு நீங்கும் என்கின்றன தர்மசாஸ்திரங்கள்.

இறைபலன் மட்டுமல்ல மருத்துவ குணமும் கொண்டது வில்வம். வில்வத்தைக் கற்பக விருட்சம் என்று சொல்வார்கள். அதாவது, அதன் இலை, வேர், பழம், பட்டை, பிசின் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது.

இத்தகைய சிறப்பு கொண்ட வில்வத்தை நம் வீடுகளில் வளர்த்து இந்த பிறவி வாழ்வுக்கும் மேல் உலக வாழ்வுக்குமான நலன்களைப் பெறுவோம்.

Related Posts

Leave a Comment