“பள்ளிகளை திறப்பதில் தாமதம் செய்ய முடியாது” அமைச்சர் செங்கோட்டையன்

by Lifestyle Editor
0 comment

தனியார் பள்ளிகளில் 100% கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.கொரோனா தடுப்பு நெறிமுறைகள் உடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” தமிழ்நாட்டில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை திறக்கப்படும். பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் செய்யமுடியாது. தனியார் பள்ளிகளில் 100% கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே பாடத்திட்டங்களை குறைத்துள்ளதால், பள்ளி திறப்பை மேலும் தாமதம் செய்ய முடியாது. 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவு செய்வார்” என்றார்.

Related Posts

Leave a Comment