துர்காதேவி காயத்ரி மந்திரம்

by Lifestyle Editor
0 comment

செவ்வாய்க்கிழமை மாலை 3 முதல் 4.30 மணி வரை ராகுகாலம். அதேபோல், வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகாலம். இந்த நாட்களில்… இந்த நேரத்தில் துர்கைக்கு விளக்கேற்றி வழிபடுவது வளம் சேர்க்கும்.

வீட்டில் ராகுகால வேளையில் விளக்கேற்றுங்கள்.

ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்

எனும் துர்காதேவியின் காயத்ரி மந்திரத்தை 11 முறை ஜபித்து துர்காதேவிக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். துர்கா காயத்ரியை, 11 முறை 24 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை ஜபிக்கலாம். துர்கைக்கு செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் தீர்த்து வைப்பாள் துர்காதேவி.

துர்கை என்றாலே துக்கத்தைப் போக்குபவள் என்று அர்த்தம். நம் துக்கங்களையெல்லாம் போக்கி அருளும் துர்காதேவியை சரணடைவோம்.

Related Posts

Leave a Comment