“ராங் காலில் கனெக்ட் ஆன காதலன்” : நெருக்கமான வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பியதால் மாணவி தற்கொலை!

by Lifestyle Editor
0 comment

காதலனுடன் நெருக்கமாக இருந்ததை படம் எடுத்து பரப்பியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 5 ஆம் தேதி குளியல் அறையில் தீ வைத்துக் கொளுத்தி கொண்டார். இதை அறிந்த அவரது பெற்றோர் மாணவியை உடனடியாக மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் உடல் முழுவதும் தீக்காயங்கள் பரவியதால் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி மாணவி, சிவகாசி மாஜிஸ்திரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்தார்.

அதில், தனது செல்போனுக்கு விக்கி என்கின்ற வெங்கடேஷ் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போன் செய்தார். ராங்காலாக வந்த அந்த போனில் பேசிய அவர், கோவில்பட்டி தனது சொந்த ஊர் என்றும் தான் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கிறேன் என்றும் கூறினார்.

இதையடுத்து இருவரும் நட்பாக பழகினோம். பின்னர் விக்கி என்னை சந்திக்க அடிக்கடி சிவகாசிக்கு வந்து சென்றார். இதை தொடர்ந்து நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகாசி வந்த அவர், என்னை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று சித்துராஜபுரம் பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார். இதை தொடர்ந்து எனக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர், தன்னுடன் உறவில் இருந்ததை படம் பிடித்து விட்டதாகவும், அதை தனது நண்பர்களுக்கு அனுப்பி விட்டதாகவும் தெரிவித்தார். இதை வெளியில் கூறினால் உனக்கு தான் அவமானம் என்றும் மிரட்டினார். இதனால் பயந்து போன நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன் என்று அந்த மாணவி கூறியுள்ளார். இருப்பினும் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து மாணவியின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு வழக்குப்பதிவு செய்த சிவகாசி போலீசார், கோவில்பட்டி செல்லப்பாண்டியன் நகரை சேர்ந்த மாணவர் விக்கி என்கின்ற வெங்கடேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Posts

Leave a Comment