ஜீரண சக்தியை அதிகரிக்க, உடல் எடையை குறைக்க இந்த காயை தினமும் சாப்பிட்டால் நிச்சயம் பலன் கிடைக்குமாம்!

by Lifestyle Editor
0 comment

நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் அளப்பறிய சத்துக்கள் நிறைந்துள்ளன. கிராமப்புறங்களில் வீட்டு தோட்டங்களில் விளைவிக்கப்படும் சுரைக்காய் உடலுக்கு சத்து தருவதோடு மருத்துவகுணம் நிறைந்துள்ளது.

கொடி இனத்தைச் சார்ந்த தாவரமான சுரைக்காய் சுவையான உணவு மட்டும் இல்லை. பல உயர்ந்த நற்குணங்கள் கொண்ட ஒரு மருந்தாகும்.சுரைக்காய் Cucurbitaceae எனும் புடலை இனத்தைச் சார்ந்தது ஆகும். Lagenaria siceraria என்பது சுரைக்காயின் தாவரப் பெயர் ஆகும். இது இந்தியா முழுமையிலும் பயிராவது. சுரைக்காயில் இரண்டு வகைகள் உண்டு.‘இனிப்புச் சுரை’ அல்லது ‘காட்டுச் சுரை’ என்றும் பிரித்துப் பார்ப்பது வழக்கம்.

கசப்பிலாச் சுரைக்கு Sweet bottle gourd என்று ஆங்கிலத்தில் பெயர். கசப்புச் சுவையுடைய காட்டுச் சுரைக்கு Bitter bottle gourd என்று பெயர். வட மொழியில் சுரைக்கு ‘தும்பினி’, ‘பிண்டபலா’ என்றெல்லாம் பெயரிட்டு அழைப்பர். காட்டுச் சுரையை வடமொழியில் ‘கடுதும்பி’ என்று குறிப்பது உண்டு.

சுரைக்காயை ஆசியா கண்டத்தில் உள்ள மக்கள் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அறிந்து அதைப் பயன்படுத்தி வருவதாக வரலாறு கூறுகிறது. சுரையை கறிச்சுரை என்றும் குறிப்பதுண்டு.பொதுவாக கசப்பில்லாத சுரையே கறியாக சமைப்பதற்குப் பயன்படும். சுரைக்கொடியை மழைக்காலங்களில் வீட்டுத் தோட்டத்திலும் கொல்லைப் பகுதியிலும் பயிராக வளர்ப்பது வழக்கம்.

சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய்.

சுரைக்காய் ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப் படுத்தப்படும் மற்றும் சுரைக்காயில் சக்தி வாய்ந்த சிறுநீர்ப் பெருக்கியாக செயல்படுகிறது.

ஜீரண சக்தியை அதிகரிக்க

சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்க சுரைக்காய் ஜூஸை குடித்தால் கல்லையும் ஜீரணுக்கும் சக்தியை கொடுக்கும்.

நீர் எரிச்சல், நீர் கட்டு

சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.

கை, கால் எரிச்சல் நீங்க

கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

உடல் எடையை குறைக்க

உடல் எடையை குறைக்க பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். சிலர் தேன் கலந்த சுடுதண்ணீரை தினமும் குடித்து உடல் எடையை குறைப்பதுண்டு. ஒரு சிலர் வாக்கிங் அல்லது ஜிம் சென்று உடல் எடையை குறைக்கிறார்கள்.

தலைவலி நீங்க

வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.

Related Posts

Leave a Comment