ஜோ ரூட்டுக்கு ஹர்பஜன் சிங் போல் பந்து வீசிய ரோகித் சர்மா! வைரலாகும் வீடியோ

by Lifestyle Editor
0 comment

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் ரோகித் சர்மா ஹர்பஜன் சிங் போல் பந்து வீசிய வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 5 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிப்ரவரி 5ம் திகதி தொடங்கியது.

பிப்ரவரி 6ம் திகதி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 555 ஓட்டங்கள் குவித்துள்ளது.

ரோரி பர்ன்ஸ் (33), டொமினிக் சிப்லி (87), டேனியல் லாரன்ஸ் (0), ஜோ ரூட் (கேப்டன்) (218), பென் ஸ்டோக்ஸ் (82), ஒல்லி போப் (34), ஜோஸ் பட்லர் (30), ஜோப்ரா ஆர்ச்சர் (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

டொமினிக் பெஸ் (28), ஜாக் லீச் (6) ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் 218 ஓட்டங்கள் குவித்து பட்டையை கிளப்பினார்.

100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் ஜோ ரூட். அதே போல் இந்திய பந்து வீச்சாளர் இஷாந்த சர்மா சொந்த மண்ணில் 100வது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்திய அணி விக்கெட் எடுக்க திணறி போது ரோகித் சர்மாவுக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்பட்டது.

2 ஓவர்கள் வீசிய ரோகித் 7 ஓட்டங்கள் கொடுத்தார். ஜோ ரூட்டுக்கு இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் போல் ரோகித் பந்து வீசியது அனைவரது கவனத்தையும் ஈரத்தது.

குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீசி வந்த ரோகித், தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து சில ஆண்டுகளாக பந்து வீச்சை நிறுத்திவிட்டார்.

ஐபிஎல் தொடரில் 2009 ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய ரோகித், ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment