நடுங்க வைக்கும் பேஸ்புக் பதிவு…மனைவி மகளை கொன்றுவிட்டு தப்பிய நபர் சாலை விபத்தில் பலி

by Lifestyle Editor
0 comment

ஸ்கொட்லாந்தில் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பின்னர் மனைவி மற்றும் மகளை கொடூரமாக கொலை செய்த கணவர் சாலை விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

40 வயதான ஸ்டீவன் ராபர்ட்சன் என்பவரே தமது முன்னாள் மனைவியும் என்.எச்.எஸ் ஊழியருமான எம்மா கூப்லாண்ட் மற்றும் அவரது மகள் நிக்கோல் ஆண்டர்சன் ஆகியோரை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிய நிலையில் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

அப்பகுதி மக்கள் அது ராபர்ட்சன் என்பதை அடையாளம் காட்டிய நிலையில், பொலிசார் கண்காணிப்பு கெமரா பதிவுகளை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் எம்மா பணியாற்றும் மருத்துவமனை அருகாமையில் தமது வாகனத்தில் ராபர்ட்சன் காத்திருப்பதையும் சிலர் சாட்சியப்படுத்தியுள்ளனர்.

எம்மா மற்றும் அவரது மகள் நிக்கோல் ஆகியோரை கொலை செய்வதற்கு முன்னர், ராபர்ட்சன் கடுமையான வார்த்தைகளால் அவர்களை வசைபாடி பேஸ்புக் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், தம்மை ஏமாற்றி, தமது பிள்ளைகளையே தமக்கு எதிராக தூண்டிவிட்ட மோசமான பெண் எம்மா என குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னரே எம்மா மற்றும் நிக்கோல் ஆகியோரை ராபர்ட்சன் கத்தியால் மூர்க்கதனமாக தாக்கியுள்ளார்.

இதில் 39 வயதான எம்மா அவர் பணியாற்றும் மருத்துவமனை வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் தாக்கப்பட்டு, பின்னர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

20 நிமிடங்களுக்கு பிறகு, குடியிருப்பு ஒன்றில் இருந்து குற்றுயிராக மீட்கப்பட்ட 24 வயது நிக்கோல் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

ஆனால், மனைவி மற்றும் வளர்ப்பு மகளை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிய ராபர்ட்சன் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

வியாழக்கிழமை இரவு நடந்த இச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment