இந்தியாவில் 52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் 3ஆம் திகதி முதல் அவசரகாலப் பயன்பாட்டுக்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்னும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக , கடந்த மாதம் 16ஆம் திகதி முதல், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 21 நாட்களில், இதுவரை, 52 லட்சத்து 90 ஆயிரத்து 474 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் கேள்விநேரத்தின்போது பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், அடுத்த மாதம் முதல் 50 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.