லண்டனில் குறைந்த வயதில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இந்த சிறுமியும் ஒருவர்! இனி என்னை பாதுகாக்க அவசியமில்லை என உற்சாகம்

by News Editor
0 comment

பிரித்தானியாவில் குறைந்த வயதில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 16 வயது சிறுமி ஒருவர், போட்டுக் கொண்டதால், அவர் இனியும் என் குடும்பத்தை காண காத்திருக்க முடியாது என்று உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Muswell Hill பகுதியை சேர்ந்தவர் Esther Rich. 16 வயதான இவர் பரம்பர இரத்த நிலை, அதாவது inherited spherocytosis விளைவாக, மருத்துவ ரீதியாக கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவராக இருந்தார்.

இதனால் பல மாதங்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இவருக்கு இந்த நோய் அவருடைய தந்தையிடம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக தன்னுடைய 5 வயதிலே இவருக்கு மண்ணீரல் அகற்றப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

உடலின் முக்கியமான பகமான மண்ணீரல் அகற்றப்பட்டுவிட்டதால், மருத்துவ ரீதியாக கொரோனாவால் பாதிக்கப்படகூடியவர் என்ற காரணத்தினால், அவருக்கு தடுப்பூசி பெரும் வாய்ப்பு கிடைத்தது.

இது குறித்து அவர் கூறுகையில், ஒரு வருடமாகப் பார்க்காத தனது நண்பர்களையும், பாட்டி மற்றும் உறவினர்களையும் தவறவிட்டதாக கூறும் அவர், நான் தடுப்பூசி பெறுகிறேன் என்று எனக்குத் தெரிந்தபோது நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன்.

ஏனென்றால் ஊரடங்கின் முடிவில் எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும், மேலும் இனி என்னை பாதுகாக்க வேண்டியதில்லை என்று உற்சாகமாக கூறியுள்ளார்.

மேலும், நான் விடுமுறைக்கு செல்ல வேண்டும், இந்த ஊசியை பெற்றுவிட்டதால், அதற்காக காத்திருக்க முடியாது, எனது நண்பர்களுடன் குரோஷியா செல்ல விரும்புகிறேன். நான் என் உறவினர்களையும் என் பாட்டி ஜெசிகாவையும் பார்க்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மண்ணீரல் என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இது இரத்தத்திலிருந்து கிருமிகளை ஆக்கிரமிக்கிறது, அதே நேரத்தில் இரத்த அணுக்களின் அளவையும் இது கட்டுப்படுத்துகிறது.

மண்ணீரல் அகற்றப்பட்டால் கல்லீரல் அதன் பல செயல்பாடுகளை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் இது போன்ற நிலையில் இருப்பவர்கள் கடுமையான தொற்றுநோய்க்கான ஆபத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் கொரோனாவால் 1014 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், புதிதாக கொரோனாவால் 19,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 111,264-ஆக உள்ளது.

அமெரிக்கா, மெக்ஸிகோ, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், பிரித்தானியா ஐந்தாவது மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையில் உள்ளது நினைவுகூரத்தக்கது.

Related Posts

Leave a Comment