பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி நான்காவது நாளாக வவுனியாவில் இருந்து ஆரம்பம்

by Lankan Editor
0 comment

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் இன்று நான்காவது நாளாக (சனிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் எனப் பெரும் திரளான மக்கள் தமது ஆதரவினை வழங்கி வருகின்றார்கள்.

இதேவேளை, வடக்கு- கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், பேரெழுச்சிப் பேரணியானது கிளிநொச்சி, வவுனியா சென்று மன்னார் ஊடாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் பொலிகண்டியில் நிறைவடையவுள்ளது.

Related Posts

Leave a Comment