‘வாரி சௌபாக்யா’ எனும் வட மத்திய மாகாணத்தின் பிரதான நீர்பாசன திட்டத்தின் ஆரம்ப விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (05) ஆரம்பமானது.
அனுராதபுரம் பலுகஸ்வெவ, மஹமீகஸ்வெவ பகுதியில் குறித்த நீர்ப்பாசன திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மஹவெலி திட்டத்தின் இறுதிக் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக வட மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் நீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நீர்பாசன கால்வாய் 28 கிலோ மீற்றர் நீளமுள்ளது எனவும் இதனூடாக 13 பிரதேச செயலக பிரிவுகளின் மக்கள் பயன்பெறவதாகவும் தெரிவிக்கப்படுகினறது.