நாட்டையும் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் – பிரதமர்

by Lankan Editor
0 comment

நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் சவுரிசவுரா நிகழ்வின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் பங்கேற்று உரையாற்றினார்.

வேளாண்மையை இலாபமுள்ள தொழிலாகவும், விவசாயிகளைத் தன்னிறைவு பெற்றவர்களாகவும் மாற்ற அரசு பாடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

கொரோனா சூழலிலும் விவசாயிகள் அதிக அளவு தானிய விளைச்சல் கண்டு சாதனை படைத்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

Related Posts

Leave a Comment