வடக்கில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Lankan Editor
0 comment

வடக்கு மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்ளில் இன்று 667 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் மன்னார் முசலி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முசலியில் கடந்த வாரம் தொற்றால் உயிரிழந்தவருடன் தொடர்புடைய 5 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் ஒருவர் வெளிமாவட்டதிலிருந்து வருகை தந்து முசலியில் தங்கியிருந்து மீன்வாடியில் தொழில் செய்பவர்.

வவுனியா வைத்தியாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் இருவரும் வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்” என்றும் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.

Related Posts

Leave a Comment