நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் ஸ்தாபகர், டொக்டர் நெவில் பெர்னாண்டோ நேற்று பிற்பகல் காலமானார்.
கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. தனது 89ஆவது வயதில் நேற்று (வியாழக்கிழமை) மாலை அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று காலமானார்.