மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி

by Lankan Editor
0 comment

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் மட்டக்களப்பு தாழங்குடாவிலிருந்து திருகோணமலை வரை முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்ட பேரணி நேற்று இரவு திருகோணமலை சிவன் கோவிலடியில் நிறைவடைந்தது.

இந்த நிலையில் திருகோணமலையில் சிவன் கோவில் இருந்து மூன்றாவது நாளாகவும் இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை ) ஆரம்பமாகியுள்ளது.

சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள். மதத் தலைவர்கள், வடக்கு கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்கல், காணிவிடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு, முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு நிரந்தரத் தீர்வை கோரி இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.

Related Posts

Leave a Comment