குக் வித் கோமாளி புகழின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? இதோ அசத்தல் புகைப்படம்

by News Editor
0 comment

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ், முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்க இரண்டாவது சீசனும் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர்.

இவர்களின் நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது, பிக்பாஸே வேண்டாம் குக் வித் கோமாளியே போதும் என சொல்லும் நபர்களே ஏராளம் என்னும் அளவுக்கு டிஆர்பியில் டாப்பில் இருக்கிறது.

இதில் பிரபலமடைந்த புகழுக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் குவிகின்றன, தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே ஹரி இயக்கத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில் நடிகர் புகழ் தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment