வாகனத்தை விடுவிக்க லஞ்சம் பெற்ற, போக்குவரத்து எஸ்.ஐ.,

by Lifestyle Editor
0 comment

கோவை

கோவையில் இருசக்கர வாகனத்தை விடுவிக்க 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் கைதுசெய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன்(30). இவர் கோவை மாவட்டம் சூலூரில் தங்கியிருந்து கட்டுமான வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகன் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது சூலூர் புறவழிச் சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் மருதையா பாண்டியன் மற்றும் காவலர் சக்திவேல் ஆகியோர், மது அருந்தியதால் முருகனின் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் வாகனத்தை விடுவிக்க 12 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என இருவரும் கூறியுள்ளனர். இதனை விரும்பாத முருகன், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். பின்னர் அவர்களது ஆலோசனையின் பேரில் இன்று ரசாயனம் தடவிய 6 ஆயிரம் ரூபாய் பணத்தை உதவி ஆய்வாளர் மருதையா பாண்டியன் மற்றும் காவலரிடம் அவர் வழங்கினார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் கையும், களவுமாக இருவரையும் கைதுசெய்து, பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்து சிறையில் அடைத்தனர்.

Related Posts

Leave a Comment