புற்றுநோயை தடுக்கும் அற்புதமான மசாலாப் பொருட்கள்!

by Lifestyle Editor
0 comment

பொதுவாக புற்றுநோய் என்பது உயிர்க் குடிக்கும் நோய் என்ற அச்சம் இயல்பாகவே மக்களிடம் இருக்கிறது

இந்த அச்சத்தைப் போக்க நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய உணவே மருந்து முறை தான் சிறந்தது.

அதிலும் புற்றுநோய் போன்ற உயிர்க் குடிக்கும் கொடிய நோய்களை உருவாக்கும் செல்களை தாக்கி அழிக்கக்கூடிய சக்தி நம்முடைய இந்தியப் பாரம்பரிய மசாலாப் பொருள்களுக்கு இருக்கின்றன.

தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

  • கேப்சைசின் அப்போப்டொசிஸின் செயல்முறையைத் தூண்டுகிறது. இது, சாத்தியமான புற்றுநோய் செல்களை அழிக்கிறது மற்றும் லுகேமியா புற்றுநோய் உயிரணுக்களின் அளவைக் கணிசமாகக் குறைக்கிறது. நம் நாவிற்கு எரிச்சலை தருவதை தவிர்த்து, புற்றுநோயைத் தடுப்பதற்கும் இந்த கேப்சைசின் அல்லது சிவப்பு மிளகாய் உதவுகிறது.
  • இஞ்சி நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், மற்றும் புற்றுநோய் செல்களைக் கொல்லவும் உதவக்கூடிய சில மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
  • ஆர்கனோவில் உள்ள பைட்டோ-கெமிக்கல் ‘குவெர்செட்டின்’ ஆனது, உடலில் உள்ள வீரியம் மிக்க உயிரணுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், புற்றுநோயை மையமாகக் கொண்ட நோய்களுக்கு எதிரான மருந்து போல இது செயல்படுகிறது.
  • இலவங்கப்பட்டை இரும்பு மற்றும் கால்சியத்தின் ஒரு சிறந்த மூலம் ஆகும். புற்று நோயின் வளர்ச்சியைக் குறைப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், மனித உடலில் புதிய நாளங்கள் உருவாகுவதைத் இது தடுக்கிறது.
  • சீரகம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது. மேலும், சீரக விதைகளில் ‘தைமோகுயினோன்’ எனப்படும் ஒரு கலவை (காம்பவுண்ட்) உள்ளது. இது புரோஸ்டேட் புற்றுநோய்க்கு காரணமாக இருக்கக் கூடிய உயிரணுக்களின் பெருக்கத்தை நிறுத்துகிறது.
  • குங்குமப்பூவில் ‘குரோசெட்டின்’ எனப்படும் இயற்கையான கரோட்டினாய்டு டைகார்பாக்சிலிக் அமிலம் உள்ளது. மேலும், புற்றுநோயை எதிர்த்து போராடுவதில், இந்த குரோசெட்டின் அமிலம் சிறந்து விளங்குகிறது. இது, நோயின் வளர்ச்சியைத் தடுப்பது மட்டுமல்லாமல், புற்றுநோயின் அளவை பாதியாகக் குறைத்து, புற்றுநோயில் இருந்து நீங்கள் முழுமையாக விடை பெறுவதற்கு உங்களுக்கு உதவுகிறது.
  • பெருஞ்சீரகத்தின் முக்கிய அங்கமான ‘அனெத்தோல்’ ஆனது, புற்றுநோய் உயிரணுக்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்க்கிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது. இது புற்றுநோய் உயிரணு பெருக்கத்தின் பின்னால் உள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட நொதி (என்சைமட்டிக்) செயல்பாடுகளை அடக்குகிறது.
  • மஞ்சள் ஆனது, ஒரு சக்திவாய்ந்த பாலிபீனால் குர்குமினை கொண்டிருக்கிறது. இது புரோஸ்டிரேட் புற்றுநோய், மெலனோமா, மார்பக புற்றுநோய், மூளைக் கட்டி அல்லது புற்றுநோய், கணைய புற்றுநோய் மற்றும் ரத்த புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.

Related Posts

Leave a Comment