சிவகார்த்திகேயன் படத்தில் குக் வித் கோமாளி புகழ் கனி! இவருடைய கணவர் யார் தெரியுமா?

by Lifestyle Editor
0 comment

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கனி.

பாரம்பரிய சமையலாக முதற்கொண்டு அனைத்தையும் மிக ருசியாக சமைப்பதில் வல்லவராகி இருக்கிறார்.

இவர் யாரென்று தேடினால், பிக்பாஸில் அசத்திய விஜயலட்சுமியின் அக்காவாம், பிரபல இயக்குனரான அகத்தியனின் மூத்த மகள் ஆவார்.

இவரது கணவரும் இயக்குனர் தான், தீராத விளையாட்டு பிள்ளை படத்தை இயக்கின திருவின் மனைவியே கனி.

இவர்களது திருமணமும் காதல் திருமணம் தானாம், காதலுக்கு தூதாக இருந்தது விஜயலட்சுமியாம், இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கனி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

 

Related Posts

Leave a Comment