இப்படி ஒரு பந்துவீச்சா? எதிரணி வீரர்களை தனது வித்தியாசமான ஸ்டைல் மூலம் திணறடிக்கும் இலங்கை வீரர்.. ஆச்சரிய வீடியோ

by Lifestyle Editor
0 comment

டி10 லீக் போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் கெவின் கொத்திகோடா வித்தியாசமான பவுலிங் ஸ்டைல் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் உலகில் பும்ரா வரை பல பவுலர்கள் வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனை கொண்டவர்கள்.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஆடம்ஸ் வளைந்து வந்து வித்தியாசமான முறையில் பந்துவீசுவார். அவருக்கு பின்பு வித்தியாசமான ஸ்டைலில் பந்துவீசுபவர்கள் கிரிக்கெட் உலகில் வராமல் இருந்தனர்.

இப்போது பால் ஆடம்ஸ் இடது கை சுழற்பந்துவீச்சாளர். அவரது பவுலிங் போல அப்படியே வலது கை பவுலிங் ஸ்டைலில் பிரபலிக்கிறார் கெவின்.

தனது பந்துவீச்சின் மூலம் அவர் எதிரணிகளை திணறடித்து வருகிறார்.

இப்போது அபுதாபி டி10 தொடரில் விளையாடி வரும் கெவினின் பவுலிங்கால் கலக்கி வருகிறார். அவரின் வித்தியாசமான பவுலிங் ஸ்டைல் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment