காதல் ததும்ப ததும்ப உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா – சரத்குமார் வெளியிட்ட புகைப்படம்!

by News Editor
0 comment

நடிகர் ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது திருமண நாள் குறித்து பதிவிட்டுள்ளார்.

இவருக்கும் நடிகர் சரத்குமாருக்கும் 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ல் திருமணம் நடைபெற்றது.

இருவரும் இணைந்து பல்வேறு திரைப்படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று இவர்கள் 20-வது வருட திருமண நாளை கொண்டாடுகின்றனர். இதை தொடர்ந்து ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், கணவர் சரத்குமாருடன் எடுத்து கொண்ட பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் இதுகுறித்த அவரது பதிவில், ”நெருங்கிய நட்பும், விதியின் வினோதமும் நம்மை இந்த அழகான பயணத்தில் ஒன்றிணைத்திருக்கிறது. நீங்கள்தான் என் சப்போர்ட்.. எப்போதும் உங்களை காதலிக்கிறேன்” என அன்புடன் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment