பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,322பேர் உயிரிழப்பு

by Lankan Editor
0 comment

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 19ஆயிரத்து 202பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,322பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகளவான பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகள் வரிசையில் பிரித்தானியா ஐந்தாவது நாடாக உள்ளது. இங்கு கொரோனா வைரஸ் தொற்றினால் 38இலட்சத்து 71ஆயிரத்து 825பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 335பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 19இலட்சத்து 57ஆயிரத்து 577பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 18இலட்சத்து நான்காயிரத்து 913பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Posts

Leave a Comment