தி.மு.க கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க முடியும் – ம.தி.மு.க தீர்மானம்

by Lankan Editor
0 comment

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடர வேண்டும் என்பதில் ம.தி.மு.க. உறுதியாக உள்ளது’ என அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ம.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், “அ.தி.மு.க. அரசை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்பது என்ற முடிவை ம.தி.மு.க. எடுத்தது. அதே நிலை சட்டசபை தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதில் ம.தி.மு.க. உறுதியாக இருக்கிறது.

தேர்தல் திகதி தொடர்பாக தேர்தல் கமிஷனின் அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வர இருக்கிறது. எனவே தேர்தல் நிதி திரட்டும் பொறுப்பை விரைந்து நிறைவேற்ற வேண்டும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment