இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(04) காலை கொழும்ப –7 இல் அமைந்துள் சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியது.
‘சுபீட்சமான எதிர்காலம் – சௌபாக்கியமான தாய் நாடு’ என்ற தொனிப் பொருளில் இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பிரதான நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.
கொரோனா தொற்று காரணமாக இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுகாதார விதிமுறைகளுக்கமைய கொண்டாடப்படுகின்றன. மேலும் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவரும் சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளுக்கு அமைய செயற்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தோடு இன்றைய நிகழ்வில் பங்குபற்றும் அனைவருக்கும் பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.